சூப்பரான சுவையில் வெள்ளை சிக்கன் குருமா: இனி இப்படி செஞ்சி அசத்துங்க

By Yashini Jan 10, 2024 04:00 PM GMT
Report

இதுவரைக்கும் சிக்கன் பிரியாணி, சுக்கா, குழம்பு, வறுவல், 65 என பலவிதமான வகையில் சிக்கனை செய்து சாப்பிட்டிருப்போம்.

இனி சிக்கன் எடுத்தால் இந்த வெள்ளை சிக்கன் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இந்த வெள்ளை சிக்கன் குருமா இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்வது?

சூப்பரான சுவையில் வெள்ளை சிக்கன் குருமா: இனி இப்படி செஞ்சி அசத்துங்க | White Chicken Kuruma Recipe In Tamil

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு

  • இஞ்சி- ஒரு துண்டு
  • பூண்டு- 8 பல்
  • பச்சை மிளகாய்- 4

மசாலா அரைப்பதற்கு

  • துருவிய தேங்காய்- ½ கப்
  • சோம்பு- ஒரு ஸ்பூன்
  • கசகசா- ½ ஸ்பூன்
  • முந்திரி- 8
  • பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்

தாளிப்பதற்கு

  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • பட்டை- 1
  • கிராம்பு- 4
  • ஏலக்காய்- 1
  • பிரியாணி இலை- 1
  • ஸ்டார் சோம்பு- 1
  • வெங்காயம்- 1
  • தக்காளி- 1
  • சிக்கன்- ¼ kg
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • மல்லித்தழை- கைப்பிடி

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சூப்பரான சுவையில் வெள்ளை சிக்கன் குருமா: இனி இப்படி செஞ்சி அசத்துங்க | White Chicken Kuruma Recipe In Tamil

தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதில் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் வெள்ளை குருமா சாப்பிட தயாராகிவிடும்.

காரம் வேண்டுமெனில் கூடுதலாக பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் காரம் விரும்புபவர்கள் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US