வெள்ளைமுடியை வேரிலிருந்தே கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவுரி இலை- 1 கைப்பிடி
- கரிசிலாங்கண்ணி- 1 கைப்பிடி
- பொன்னாங்கண்ணி கீரை- 1 கைப்பிடி
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- மருதாணி- 1 கைப்பிடி
- வேப்பிலை- 1 கைப்பிடி
- ரோஜா இதழ்- 1 கைப்பிடி
- செம்பருத்தி பூ- 1 கைப்பிடி
- சின்ன வெங்காயம்- ½ kg
- நெல்லிக்காய்- ½ kg
- வெட்டிவேர்- 1 கைப்பிடி
- வெந்தயம்- 50g
- கருஞ்சீரகம்- 50g
- தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
- ஆவாரம்பூ- 1 கைப்பிடி
தாயாரிக்கும் முறை
முதலில் மேலே உள்ள அனைத்து இலைகளையும் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் அவுரி இலை, கரிசலாங்கண்ணி இலை, பொன்னாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, மருதாணி, வேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸியில் சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து அரைத்து அதன் சாறை மற்றும் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து மிக்ஸியில், காயவைத்த ரோஜா இதழ், செம்பருத்தி பூ மற்றும் ஆவாரம்பூ சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணலை வைத்து அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நெல்லிக்காய் சாறை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
நிறம் மாறி பொன்னிறமாக வந்ததும் இதில் அரைத்து வைத்த இலைகளை சேர்த்து நிறம் மாறி வரும் வரை கொதிக்கவிடவும்.
அதன் பின் அரைத்து வைத்திருந்தக வெந்தயம், கருஞ்சீரக பொடி மற்றும் ரோஜா இதழ், செம்பருத்தி பூ, ஆவம்பூ அரைத்த பொடியை சேர்த்து கலந்துவிடவும்.
வெட்டிவேரும் சேர்த்து நன்கு கலந்து இதில் 2 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அனைத்து 10 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
இறுதியாக இதனை வடிகட்டி தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |