ட்ரம்ப் அதனை செய்யவில்லை! சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து.,வெள்ளை மாளிகையின் கரோலின் கொந்தளிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் ரீதியாக தூண்டும் பிறந்தநாள் கடிதத்தை எழுதவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிறந்தநாள் செய்தியின் நகல்
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பழைய ஆபாச பிறந்தநாள் செய்தியின் நகல் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினை தாக்க பாதிக்கப்பட்டவர்களை அரசியல் சிப்பாய்களாக பயன்படுத்தியதாக ஜனநாயக கட்சியினரை வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இதுகுறித்து பேசியபோது, "ஜனாதிபதி (ட்ரம்ப்) இந்தக் கடிதத்தை எழுதவில்லை. அவர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. 2003 கடிதத்தில் கடிதத்தில் உள்ள கையொப்பத்தையும், அந்த நேரத்தில் ஜனாதிபதியின் கையெழுத்தையும் மதிப்பாய்வு செய்யும் கையெழுத்து நிபுணருக்கு ட்ரம்ப் நிர்வாகம் திறந்திருக்கும்" என்றார்.
மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஜனாதிபதி ட்ரம்ப் தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியை புறக்கணித்த அவர், பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்த எந்த சந்திப்புகளும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக இந்த விடயம் குறித்து ட்ரம்ப் பேசியபோது, முடிந்துபோன பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், அனைத்து கருத்துக்களையும் ஊழியர்களிடம் தான் கொடுத்ததாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |