ட்ரம்ப், மஸ்க்கிற்கு எதிரான போராட்டம்: அதிர்ச்சி கொடுத்த வெள்ளை மாளிகை
எலான் மாஸ்கிற்கும், DOGE துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
DOGE நடவடிக்கை
அமெரிக்காவில் அரசின் தேவையற்ற செலவுகளை கண்டு, அதனை நிறுத்தும் பணியை DOGE செய்து வருகிறது. இதன் நடவடிக்கையாக பணிநீக்கம், நிதி ரத்து ஆகியவை செய்யப்பட்டு வருகிறது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) இதன் தலைவர் என்பதால் மக்கள் அவருக்கும் எதிராகவும், ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை விளக்கம்
இந்த நிலையில் வெள்ளை மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், "அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறை என்பது ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகத்தின் ஓர் அங்கமாகும்.
அத்துறை சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் எலான் மஸ்க்கிற்கு இல்லை. அவர் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக மட்டுமே பணியாற்றுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |