வெள்ளை மாளிகையில் வேலை... ட்ரம்ப் வெற்றிக்கு காத்திருக்கும் எலோன் மஸ்க்
ஜனாதிபதி தேர்தலில் வென்றால், தாம் அமைக்கும் அரசாங்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு பொருத்தமான பதவி ஒன்று உருவாக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செயல்திறன் ஆணையம்
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து ஆதரவு திரட்டி வருபவர் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்.
இந்த நிலையிலேயே, தமது தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அரசாங்க செயல்திறன் ஆணையம் என்ற புதிய பதவியை உருவாக்கி அதற்கு எலோன் மஸ்கை தலைவராக நியமிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் தமது எக்ஸ் சமூக ஊடகம் வாயிலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் நட்பு ரீதியான நேர்காணல் ஒன்றை சில வாரங்கள் முன்பு நேரலை செய்திருந்தார்.
சம்பளம் தேவை இல்லை
இந்த நிலையிலேயே எலோன் மஸ்க் தொடர்பில் வாக்குறுதி ஒன்றை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான அந்த ஆணையம், பெடரல் அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களிலும் நிதி மற்றும் செயல்திறன் தணிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் கடுமையான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைக்கு எலோன் மஸ்க் ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள எலோன் மஸ்க், அப்படியான ஒரு ஆணையம் நாட்டிற்கு மிகவும் தேவை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சம்பளம் தேவை இல்லை என்றும் எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |