வெள்ளை மாளிகை எலான் மஸ்கின் புதிய ட்விட்டர் விதிக்கு பணம் செலுத்தாது: வெளியிடப்பட்ட அறிக்கை!
எலான் மஸ்கின் புதிய ட்விட்டர் விதியான சரிபார்க்கப்பட்ட புளூ டிக்கை ”Blue tick" பெற ட்விட்டர் கணக்கு வைத்திருப்போருக்கு சந்தா செலுத்த முடியாதென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சந்தா செலுத்தும் முறை
ட்விட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் கணக்குகளை வெரிஃபைடு செய்து புளூ டிக் (blue tick) பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க்(elon musk) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 1, 2023 முதல் ட்விட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட ட்விட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகிவிட்டது.
பணம் கட்ட மறுக்கும் வெள்ளை மாளிகை
Axios-இன் அறிக்கையின்படி, நிர்வாகம் Twitter Blue-க்கு சந்தா செலுத்தாது என்பதால், ஊழியர்கள் தொடர்ந்து நீல நிற டிக் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
@britannica.com
ஒரு நிறுவனமாக ட்விட்டர் கணக்கை சரிபார்க்கப்படுவதற்கு ஊழியர்களுக்கு பணம் செலுத்த மாட்டோம் என்றும், தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் ட்விட்டர் புளூவை வாங்கும் ஊழியர்களுக்கு திருப்பிச் செலுத்த மாட்டோம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு உள்நாட்டில் அனுப்பப்பட்டிருந்தாலும், சில ஏஜென்சிகள் மற்றும் துறைகள் எதிர்காலத்தில் இதே போன்ற வழிகாட்டுதலைப் பெறலாம்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தொடர்ந்து சாம்பல் நிற சரிபார்ப்பு அடையாளத்துடன் சரிபார்க்கப்படுவார்கள் என வெள்ளை மாளிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது.