நாவூறும் சுவையில் வெள்ளை மட்டன் பிரியாணி.., எப்படி செய்வது?
குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த வெள்ளை மட்டன் பிரியாணி மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் வெள்ளை மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி- 1kg
- மட்டன்- 1kg
- வெங்காயம்- 200g
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50g
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- பச்சைமிளகாய்- 5
- தேங்காய் பால்- 1 கப்
- பாதம்- 50g
- பிஸ்தா- 25g
- முந்திரி- 25g
- கசகசா- 10g
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 6
- சோம்பு- 2 ஸ்பூன்
- ஏலக்காய்- 3
- எலுமிச்சை- ½
- நெய்- 50ml
- தேங்காய் எண்ணெய்- 50ml
- உப்பு- தேவையான அளவு
- உலர் திராட்சை- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டன், தயிர், பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு , உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிணைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதைத்தொடர்ந்து குக்கரில் ஊறவைத்த மட்டன் கலவையை சேர்த்து மட்டன் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
அதன்பின் மட்டனில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
பின் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின் வேகவைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மட்டன் வேகவைத்த தண்ணீரை 1 கப் அரிசிக்கு 1½ கப் என்கின்ற அளவிற்கு ஊற்றவும்.
பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து முக்கால் பதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்க்கவும்.
இறுதியாக மூடிபோட்டு தம் போட்டு இறக்கினால் வெள்ளை மட்டன் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |