இந்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் - அண்ணாமலை
இந்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
விழாவில் அண்ணாமலை
தமிழக மாவட்டம், கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் பெருவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அவர், அங்கு காவடி ஆட்டத்தை உற்சாகப்படுத்திவிட்டு நொய்யல் படித்துறையில் நடைபெற்ற தீப ஆரத்தியில் கலந்து கொண்டு வழிபட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன், நடிகை கஸ்தூரி, பாஜக மாநில விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்தை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும், அம்ரூத் திட்டத்தின் கீழ் போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும்" கூறினார்.
மேலும் பேசிய அவர், "என்னுடைய பாத யாத்திரை மேற்கு மண்டலத்தில் செப்டம்பர் 4 ஆம் திகதி தொடங்கப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதிக்கான துறை ரீதியாக உள்ள பட்டியலை வெள்ளை அறிக்கையாக 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |