மழைநீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை.., உதயநிதி ஸ்டாலின் பதிலடி
வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி பேசியது
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் இன்று சென்னைக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அந்தவகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், கன மழையில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
பின்னர் அவரிடம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "சென்னையில் மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்" என்று பதில் அளித்தார்.