உங்க மூக்கைச் சுற்றி வெள்ளையா சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? இதனை எப்படி போக்கலாம் தெரியுமா?
பொதுவாக நம்மில் சிலரது மூக்கின் மேல் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் அசிங்கமான புள்ளிகள் காணப்படுவது வழக்கம்.
இதையே வெள்ளைப்புள்ளிகள் என்று கூறுவர். இது சருமத்தில் இறந்த செல்கள், எண்ணெய் பசை போன்றவை அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்புகள் ஏற்படும் போது, அவை வெள்ளைபுள்ளிகளை உருவாக்கும்.
இப்படி சருமத்தில் உருவாகும் வெள்ளைப்புள்ளிகள் ஒருவரின் முக அழகையே பாழாக்கும்.
இதனை அப்படியே விடமால் ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டே சரி செய்யலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை நன்கு கலந்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வரவும்.
- ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் முழுவதும் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வந்தால் போதும்..
- ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.
- ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், வெள்ளைப்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பொலிவும் மேம்படும்.
- சருமத்தில் உள்ள வெள்ளைப்புள்ளிகள் நொடிகள் நீங்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தேய்த்துக் கழுவி வருவது நல்லது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.