புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு: திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பிரித்தானியருக்கு தண்டனை
வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் கொண்டவரான ஒரு பிரித்தானியர், சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளரைக் கத்தியால் குத்தினார்.
அவரது செயல்கள் சந்தேகமின்றி தீவிரவாத தாக்குதல் என்று கூறியுள்ளார் நீதிபதி ஒருவர்!
சாப்பிட்டுக்கொண்டிருந்தவரை கத்தியால் குத்திய நபர்
இங்கிலாந்திலுள்ள Worcester என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்துள்ளார் Nahom Hagos (25) என்னும் எரித்ரிய நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர்.
அப்போது அங்கு வந்த Callum Parslow (32) என்னும் வெள்ளையர், Nahomஐ கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளார். தடுத்த Nahomஇன் கைகளிலும் குத்துவிழுந்தது.
அந்த தாக்குதலால் உடலளவிலும் மனதளவிலும் நிலைகுலைந்துபோனார் Nahom.
நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
இந்நிலையில், கைது செய்யப்பட்ட Callumக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 22 ஆண்டுகள், 8 மாதங்கள் சிறையில் இருக்கும் வகையில் Callumக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பளித்த நீதிபதியான Mr Justice Dove, Callumஇன் செயல், சந்தேகமின்றி ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, தான் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரால் கோபமும் விரக்தியும் அடைந்திருந்ததாகவும், அவர்களில் ஒருவரைக் குத்தவேண்டும் என்று திட்டமிட்டே Nahom தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றதாகவும் Callum கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |