கிழக்கு லண்டனில் 22 இளம்பெண்களை தவறாக தொட்ட மர்ம நபர்: கணினி உதவியால் வரையப்பட்ட படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்
கிழக்கு லண்டனில் 22 இளம்பெண்களை பாலியல் ரீதியாக ஒருவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சைக்கிளில் வரும் அந்த இளைஞர், தனியாக வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லும் இளம்பெண்களின் பின்பக்கங்களை தொட்டுவிட்டு, பிறகு மோசமாக அவர்களை விமர்சித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவாராம்.
இந்த ஆண்டு பிப்ரவரிக்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் மட்டும் இதுவரை 22 பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக புகாரளித்துள்ளார்கள்.
16 அல்லது 17 வயதிருக்கும் அந்த இளைஞரைக் குறித்து பெண்கள் அளித்த புகாரிலிருந்து, அவர்களைத் தாக்கியது ஒரே நபர்தான் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த பெண்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில், பொலிசார் கணினியின் உதவியுடன் வரையப்பட்ட அந்த இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைத் தேடி வருகிறார்கள்.
அந்த நபரைக் காண்பவர்கள் உடனடியாக தங்களுக்கு தகவலளிக்கவேண்டும் என பொலிசார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.