பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் மலேரியா தடுப்பூசி! WHO அங்கீகாரம்
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு முதல் முறையாக மலேரியாவுக்கு எதிராக வழங்கப்படுகிறது.
பிரித்தானியாவில் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (GlaxoSmithKline) நிறுவனம் எனும் மருந்து நிறுவனம், மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் (Mosquirix) அல்லது RTS,S என்ற தடுப்பூசியை கடந்த 1987-இல் உருவாக்கியது.
அந்த தடுப்பூசியின் செயல்திறன் 30 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதனால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக, கடந்த 2019-ல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அந்த மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
Picture: Brian Ongoro/Getty Images
இந்நிலையில், இந்த மலேரியா தடுப்பூசியை முதல் முறையாக, ஆப்ரிக்காவைச் சோ்ந்த சிறுவா்கள், செலுத்திக்கொள்ள இருக்கிறாா்கள்.
ஆண்டுக்கு 260,000 குழந்தைகளை கொல்லும் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் இது ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் (Dr Tedros Adhanom Ghebreyesus) கூறியுள்ளார்.
மலேரியாவுக்கு எதிரான மற்றொரு தடுப்பூசி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அது R21/Matrix-M என்று அழைக்கப்படுகிறது.
அதனை, புர்கினா பாசோவில் 450 குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரு வருட ஆய்வில் 77% செயல்திறனைக் காட்டியது என ஆராய்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதத்தில் சொன்னார்கள், ஆனால் அது இன்னும் சோதனை நிலையில் உள்ளது.
கோவிட் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் மலேரியாவுக்கு எதிரான போராட்டம் தடைபட்டுள்ளது.
இந்த நோய் கொரோனா வைரஸை விட மிகவும் கொடியது என கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் 212,000 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகல் பதிவாகியுள்ளது. மேலும், WHO மதிப்பீட்டின்படி, 2019 இல் 386,000 ஆப்பிரிக்கர்களை இந்த நோய் கொன்றது.