இந்திய பிரதமர் மோடியின் சகோதரர்கள் யார்? தற்போது என்ன செய்கிறார்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்கள் பரவலாக வெளியில் வந்ததில்லை.
பிரதமர் மோடி செப்டம்பர் 17 ஆம் திகதி 1950 ஆம் ஆண்டு தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார்.
மோடியுடன், சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி மற்றும் அம்ருத் மோடி என மொத்தம் 5 பேர் பிறந்தனர். அவர்களில் நரேந்திர மோடி மூன்றாவதாக பிறந்தவர்.
சோமா மோடி
பிரதமர் மோடியுடன் பிறந்த சோமா மோடி சுகாதாரத்துறை அதிகாரியாவார். இவர், தற்போது முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.
பங்கஜ் மோடி
மோடியுடன் பிறந்தவர்களின் பங்கஜ் மோடி இளையவர் ஆவார். இவர், குஜராத் மாநிலத்தில் தகவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அம்ருத் மோடி
அம்ருத் மோடி, ஒரு தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாத சம்பளமாக ரூ.10,000க்கும் குறைவாக வாங்கிக்கொண்டு வருகிறார்.
இவர் தனது மகன் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அகமதாபாத் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
பிரஹலாத் மோடி
பிரஹலாத் மோடி, நியாய விலைக் கடை உரிமையாளராகவும், குஜராத் மாநில நியாய விலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் மோடியின் அரசு கொள்கைகளுக்கு எதிராக புகார்களை அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |