அம்பானி மகள் முதல் நயன்தாரா வரை: இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரபலங்கள் யார் யார்?
பாலிவுட் நடிகைகள் முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் வரை பல பிரபல ஜோடிகள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
இஷா அம்பானி தம்பதியினர்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும், அவரது கணவர் ஆனந்த் பிரமாலுக்கும் நவம்பர் 19, 2022 அன்று இரட்டை குழந்தைகள் பிறந்தது.
மூன்று வருட திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்ணா என்று பெயர் வைத்துள்ளனர்.
நயன்தாரா தம்பதியினர்
தென்னிந்திய நாடியகையான நயன்தாரா ஜூன் 9, 2022 அன்று இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்தார். நான்கு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் வாடகைத் தாய் மூலம் அக்டோபர் 9, 2022 அன்று இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்தனர்.
ப்ரீத்தி ஜிந்தா தம்பதியினர்
பாலிவுட்டின் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஜீன் குட்இனாஃப் என்பவரை பிப்ரவரி 2016 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நவம்பர் 2021 அன்று வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
கரண்வீர் போஹ்ரா தம்பதியினர்
தொலைக்காட்சி நட்சத்திரமான கரண்வீர் போஹ்ரா மாற்று டீஜய் சந்து ஆகியோர் 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அக்டோபர் 19, 2016 அன்று பெல்லா மற்றும் வியன்னா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது.
ரூபினா திலாய்க் தம்பதியினர்
பிரபல தொலைக்காட்சி ஜோடியான ரூபினா திலைக் மற்றும் அபினவ் சுக்லா ஜூன் 2018 இல் சிம்லாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு டிசம்பர் 27, 2023 அன்று இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |