சந்திரயான் திட்டங்களில் பெருமை சேர்த்த தமிழர்கள் யார் யார்?
சந்திரயான் திட்டங்களில் பணியாற்றி பெருமை சேர்த்த தமிழர்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சந்திரயான்
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதில் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சந்திரயான் -3 விண்கலம் சாதனையை படைக்கவுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. இந்த நிகழ்வை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.
மயில்சாமி அண்ணாதுரை
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொத்தாவடி கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர், சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர்.
மேலும், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை முக்கிய பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா வனிதா
தமிழ்நாட்டில் உள்ள சென்னையை சேர்ந்தவர் முத்தையா வனிதா. இவர் சந்திரயான்-2 திட்டத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், இவர் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.
வீரமுத்துவேல்
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் ரயில்வே ஊழியராக பணியாற்றியவர் . இவர், தொழிற்கல்வி முடித்து விட்டு, தாம்பரம் தனியார் கல்லூரியிலும் , சென்னை ஐஐடியில் தொழிற்கல்வி, பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என தொடர்ந்து படித்து வந்தார்.
2016 ஆம் ஆண்டு வீரமுத்துவேல் சமர்ப்பித்த விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதனை செய்யப்பட்டது.
நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் வீரமுத்துவேல் உருவாக்கிய தொழிநுட்பம் உதவியாக இருப்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. இத்தனை சாதனை செய்து பலரது பாராட்டையும் பெற்ற வீரமுத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநர் ஆனார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |