ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு எதிராக வாதாடி வென்ற இந்திய வம்சாவளி சட்டத்தரணி
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றிய இந்திய குடியேறிகளின் மகன், ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடியான வரிகளை ரத்து செய்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முகமாக மாறியுள்ளார்.
சட்டத்தின் ஆட்சிக்காக
அமெரிக்காவின் முன்னாள் செயல் சொலிசிட்டர் ஜெனரலான நீல் கத்யால் என்பவரே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு, ட்ரம்பிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பை, கிட்டத்தட்ட ஒவ்வொரு வர்த்தக கூட்டாளியிடமிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது நியாயமற்ற, அரசியலமைப்பிற்கு முரணான வரிகள் என்றே அவர் வாதிட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், இன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சிக்காகவும், எல்லா அமெரிக்கர்களுக்காகவும் நிலைகொண்டுள்ளது என கத்யால் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், ஜனாதிபதிகள் சக்திவாய்ந்தவர்கள், ஆனால் நமது அரசியலமைப்பு இன்னும் சக்திவாய்ந்தது. அமெரிக்காவில், நாடாளுமன்றம் மட்டுமே அமெரிக்க மக்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்றார்.
இந்தியாவில் இருந்து குடியேறிய
ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வரிகள் இன்றியமையாதவை என்று ட்ரம்ப் வாதிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து குடியேறிய பெற்றோரான ஒரு மருத்துவருக்கும் பொறியியலாளருக்கும் சிகாகோவில் பிறந்த கத்யால், அரசியலமைப்புச் சட்டத்தில் அதிக சவால்கள் நிறைந்த போராட்டங்களைச் சுற்றி ஒரு வாழ்க்கையை உருவாக்கியுள்ளார்.
அவர் டார்ட்மவுத் கல்லூரி மற்றும் யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரையருக்கு எழுத்தராகப் பணியாற்றினார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் செயல் சொலிசிட்டர் ஜெனரலான நியமிக்கப்பட்ட கத்யால், உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு தழுவிய மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் ஃபெடரல் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அவர் உச்ச நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை வாதிட்டு, சிறுபான்மை சட்டத்தரணிகளுக்கான சாதனைகளை முறியடித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |