ஈரானின் அதிமுக்கிய அணு விஞ்ஞானியை படுகொலை செய்தது யார்? எப்படி? லண்டன் வார இதழில் வெளியான முக்கிய தகவல்
ஈரானின் அதிமுக்கிய அணு விஞ்ஞானி Mohsen Fakhrizadeh-ஐ இஸ்ரேலியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்ததாக லண்டனை தளமாக கொண்ட யூத வார இதழான The Jewish Chronicle தெரிவித்துள்ளது.
2020 நவம்பர் 27ம் திகதி Mohsen Fakhrizadeh காரில் சென்றுக்கொண்டிருந்து போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் The Jewish Chronicle வெளியிட்ட அறிக்கை படி, Mohsen Fakhrizadeh-ஐ கொல்ல பயன்படுத்தப்பட்ட உயர் தர தொழிநுட்ப ஆயுதத்தை இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் ஈரானுக்கு கொண்டுவந்ததாக பெயரிடப்படாத உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலை மொசாட் தான் நடத்தியதாக The Jewish Chronicle உறுதிப்படுத்தியுள்ளது.
20-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மற்றும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த 20 உளவாளிகள் குழு, ஒரு டன் எடையுள்ள ஆயுதத்தை சில தண்டுகளாக ஈரானுக்குள் கடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
மொசாட் உளவுத்துறை அதிகாரிகள் சுமார் 8 மாதங்கள் Mohsen Fakhrizadeh-ஐ தீவிரமாக கண்காணித்து சதிதிட்டத்தை திட்டியதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக செவ்வாயன்று, ஈரானிய உளவுத்துறை அமைச்சர் Mahmoud Alavi, ஈரானிய ஆயுதப்படை உறுப்பினர் ஒருவர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
