வேலை இழக்கும் அச்சத்தில் நூற்றுக்கணக்கான உலக சுகாதார அமைப்பு பணியாளர்கள்
உலக சுகாதார அமைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பணியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆட்குறைப்பு
உலக சுகாதார அமைப்பு தனது பணியாளர்களில் 25 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது 35 சதவிகித பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து பணியாளர்களுக்கு கடும் அச்சம் உருவாகியுள்ளது.
காரணம் என்ன?
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
ஏற்கனவே அளிப்பதாக கூறியிருந்த நிதியைக் கூட ட்ரம்ப் நிர்வாகம் கொடுக்கவில்லை என்றும், அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவேதான் உலக சுகாதார அமைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பில் 2,400 பேர் பணியாற்றும் நிலையில், 800க்கும் அதிகமானோர் பணி இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.