மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்தில் சில பகுதியை அறக்கட்டளைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எழுதி வைத்த நிலையில் சில துப்பாக்கி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.
துப்பாக்கி யாருக்கு?
மறைந்த ரத்தன் டாடா தன்னுடைய தன்னுடைய 3 முக்கிய ஆயுதங்களை தனது நண்பரான மெஹில் மிஸ்திரிக்கு வழங்க வேண்டும் என்று உயிலில் எழுதி வைத்துள்ளார். இதனால், அவரது துப்பாக்கிகள் மெஹில் மிஸ்திரிக்கு செல்கிறது.
டாடா குடும்ப உறுப்பினர்களுக்கு பிறகு டாடா குழும நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் எதுவென்றால் மிஸ்திரி குடும்பம் தான்.
மிஸ்திரி குடும்பத்தின் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். ஆனால், டாடா குழுமத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதில், மெஹில் மிஸ்திரியின் தாயாரும், சைரஸ் மிஸ்திரியின் தாயாரும் சகோதரிகள் ஆவார்.
பலோன்ஜி குழும நிறுவனங்களுக்கு தலைமை வகித்து வரும் மெஹில் மிஸ்திரி, 2022 ம் ஆண்டில் டாடா அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராக இணைந்தார். பின்னர், ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் ஆனார்.
ரத்தன் டாடாவுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சுமந்த் மூழ்காவுக்கர் துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கினார்.
மீதமுள்ள இரண்டு துப்பாக்கிகளும் பரம்பரை சொத்து மூலம் கிடைத்தது. இந்நிலையில், இந்த மூன்று துப்பாக்கிகளும் அவரது நண்பரான மெஹில் மிஸ்திரிக்கு வழங்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |