கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் போதும் என பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள்ளார்.
தற்போது, பிரான்சிலுள்ள தடுப்பூசி மையங்களில் ஒரு சொட்டு இரத்தம் கொண்டு செய்யப்படும் ஆன்டிபாடி சோதனைகள் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த சோதனையிலிருந்து ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வந்துள்ளதா என்பதைக் கண்டறியலாம். தங்களுக்குத் தெரியாமலே யாருக்காவது கொரோனா வந்து சென்றிருந்தால், இந்த சோதனை மூலம் அதைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், சிலருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை, அத்துடன் தங்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்ற செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மீண்டும் கொரோனா தொற்ற வாய்ப்பில்லை.
அவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும், அவை மீண்டும் கொரோனா
தொற்றுக்கு ஆளாவதிலிருந்து அவர்களை பாதுகாக்கும் என்பதாலேயே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.