அலுவலகத்திலே உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி - யார் இந்த அனுராக் தன்கர்?
திரிபுரா டிஜிபி அலுவலகத்திலே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி
திரிபுரா மாநில காவல்துறைத் தலைவராக(DGP) பணியாற்றி வருபவர் அனுராக் தன்கர்(60).

நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரம் வெளியே வராத நிலையில், அவரது உதவியாளர் கூச்சலிட்டுள்ளார்.
அதன் பின்னர் கதவு உடைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
தகவலறிந்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு விரைந்தார்.
ஒரு மாநில டிஜிபியே தனது அலுவலகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.
I am deeply shocked and saddened by the tragic demise of Anurag, IPS, Director General of Police, Tripura, who was found hanging in the washroom of his official chamber today.
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) July 20, 2026
Upon receiving the information, I, along with the Chief Secretary and Home Secretary, immediately…
எதிர்கட்சிகளின் நீதித்துறை விசாரணைக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து, அரசு ஒரு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
திரிபுரா அரசு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மாநில துக்கத்தை அறிவித்துள்ளது.
குறிப்புகள் அடங்கிய கடிதம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என தெரிவிக்க காவல்துறை மறுத்து விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது பணியில் ஏற்பட்ட அழுத்தமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அனுராக் தன்கர்
1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் தன்கர், உளவுத்துறை டிஜிபி கூடுதல் டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஐஜி உள்ளிட்ட பல மூத்த பதவிகளில் பணியாற்றிய பிறகு, தங்கர் கடந்த ஆண்டு மே 18 அன்று திரிபுரா டிஜிபியாகப் பொறுப்பேற்றார்.

சிபிஐ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆகியவற்றில் மத்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றியதுடன், 2003-04 காலகட்டத்தில் கொசோவோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியிலும் தன்கர் அங்கம் வகித்தார்.
மேலும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறைப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்த சிபிஐ விசாரணை 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை மறுவிசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (SIT) தலைமை தாங்கியுள்ளார்.
ஜூன் மாதம் அவரது பதவிக்காலத்தை நிறைவடடைந்த நிலையில், 11 மாத கால நீட்டிப்பைப் பெற்றிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |