60வது பிறந்தநாளில் 3வது காதலியை அறிமுகப்படுத்திய ஆமிர்கான் - யார் இந்த தமிழ்நாடு பூர்விக பெண்?
ஆமிர்கான் தனது 60வது பிறந்தநாளில் 3வது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆமிர் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமிர் கான், இன்று தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நேற்று இரவே, அவரது சக நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் ஆமிர் கானின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
அதன்பிறகு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியவர், தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை (Gauri Sprat) செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தார்.
கௌரி ஸ்ப்ராட்
"கௌரி ஸ்ப்ராட்டுடன் 25 ஆண்டு கால பழக்கம் உள்ளது. நாங்கள் கடந்த 18 மாதங்களாக காதலித்து வருகிறோம். அவர் பெங்களூரில் வசித்து வந்ததால், அங்கு சென்று சந்தித்து வந்தேன்" என கூறினார்.
கவுரி மும்பையில் சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
கவுரியின் தாய் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர். அவரது தந்தை ஐரிஷ் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
மேலும் இவரது தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என கூறப்படுகிறது. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
2 விவாகரத்து
அமீர்கான் இதற்கு முன் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். 1986 ஆம் ஆண்டு ரீனா டட்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜுனைத் கான் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். ஜுனைத் கான் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஐராவுக்கு திருமணமாகிவிட்டது.
2002 இல் முதல் மனைவி ரீனா டட்டாவை விவாகரத்து செய்த அவர், அடுத்து 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தின் மூலம் ஆசாத் என்கிற மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். கிரண் ராவை 2021 ஆம் ஆண்டு அமீர்கான் விவாகரத்து செய்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |