சீன வீரரை தோற்கடித்த இளம் இந்திய செஸ் வீரர் - யார் இந்த குகேஷ் தொம்மராஜு?
நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த இந்திய இளம் வீரர் குகேஷ் தொம்மராஜு, இதுவரை இல்லாத இளம் செஸ் சாம்பியன் ஆனார்.
யார் இந்த குகேஷ் தொம்மராஜு?
குகேஷ் என்று அழைக்கப்படும் குகேஷ் தொம்மராஜு, மே 29, 2006 அன்று இந்தியாவின் சென்னையில் ENT அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் பத்மா ஆகியோரின் மகன் ஆவார்.
தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த குகேஷ் ஏழு வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார்.
2015 ஆம் ஆண்டு ஏசியன் ஸ்கூல் செஸ் சாம்பியன் போட்டியில் 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் போட்டியிட்ட குகேஷ், அதில் வெற்றிப் பெற்றார்.
செஸ் பயணம் எப்படி ஆரம்பித்தது?
அவர் 12 வயதில் 2018 ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
2018 ஆண்டிற்கு பிறகு, அடுத்ததாக ஏசியன் யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துக்கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்றார்.
மீண்டும் அதே ஆண்டில், இளைஞருக்கான உலக செஸ் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
34 வது Cappelle-la-Grande ஓபன் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இதன் மூலமே மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன 2 வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் கடந்த ஆண்டு பிரபல செஸ் வீரர் ஆனந்த் விஸ்வநாதனின் 37 ஆண்டு கால சாதனையை முறியடித்து டாப் செஸ் வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
🇮🇳 Gukesh D defeats 🇨🇳 Ding Liren in Game 14 of the FIDE World Championship Match, presented by Google and becomes the new World Champion. #DingGukesh pic.twitter.com/GgeV9UkVor
— International Chess Federation (@FIDE_chess) December 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |