அயோத்தி ராமர் கோவிலுக்கு அதிக நன்கொடை வழங்கியது யார் தெரியுமா? - வெளியான தகவல்
இன்று மதியம் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதால், நகரம் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் முழுவதுமாக நிர்மாணிக்கப்படுவது முழுக்க முழுக்க ஆதரவாளர்களின் நன்கொடைகளால் மட்டுமே ஆகும்.
அந்தவகையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிக நண்கொடை வழங்கியவர் பற்றி தெரியுமா?
அவர் எவ்வளவு தொகையை வழங்கியுள்ளார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக நன்கொடை வழங்கியது யார்?
திலீப் குமார் வி லக்கி மற்றும் அவரது குடும்பத்தினர் 101 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இது சுமார் 68 கோடி ரூபாய் மதிப்புடைய நன்கொடையாகும்.
அந்த தங்கமானது ராமர் கோயிலின் கதவுகள், கருவறை, திரிசூலம் மற்றும் தூண்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரூ. 11.3 கோடி நன்கொடை அளித்த ஆன்மீகத் தலைவர் மொராரி பாபு மற்றும் அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த ராம பக்தர்கள் தனித்தனியாக ரூ. 8 கோடியை நன்கொடை அளித்துள்ளனர்.
மேலும், குஜராத்தின் வைர தொழிலதிபரான கோவிந்த்பாய் தோலாக்கியா ரூ. 11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |