தமிழ் சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?
தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பார்வையாளர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
தினசரி அடிப்படையில் தங்கள் நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்விப்பது முதல் சமூக ஊடக இருப்பு மூலம் ரசிகர்களைக் கவர்வது வரை, நட்சத்திரங்கள் ஒருபோதும் பார்வையாளர்களின் இதயங்களை வெல்லத் தவறுவதில்லை.
சின்னத்திரை பொறுத்தளவில் பல நாடகங்கள் பல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் சின்னத்திரை நடிகை யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்?
சினிமாவில் நடிகர்களுக்கு லட்சங்கள் முதல் கோடிகள் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அதே போன்று தான் சின்னத்திரையிலும் ஒரு சிலருக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. சின்னத்திரையில் யார் அதிக சம்பளத்தை பெறுகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
அந்த வகையில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்ச ரூபாய் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் "மூன்று முடிச்சு" தொடரில் கதாநாயகியாக நடிக்கு சுவாதி என்ற நடிகைக்கு தான் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது எனலாம். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |