வறுமையை உடைத்து ரூ.79,700 கோடி நிறுவனத்துக்கு அதிபதியான இந்தர் ஜெய்சிங்கானி.., இவர் யார்?
வறுமையை உடைத்து பல சிரமங்களை தாண்டி ரூ.79,700 கோடி நிறுவனத்துக்கு அதிபதியான இந்தர் ஜெய்சிங்கானியை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்
இந்தர் ஜெய்சிங்கானி (inder jaisinghani), தனது 15 வயதில் 1968 -ம் ஆண்டு தந்தையை இழந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இதனால் அவரது படிப்பை பாதியிலேயே நிறுத்தி, தந்தை பார்த்து வந்த கடையை இந்தர் எடுத்து நடத்தினார்.
இவரது தந்தை, மும்பையின் லோஹர் வீட்டு வசதி பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார். பின்பு, தனது சகோதரர்களான கிரிஹரி, அஜய், ரமேஷ் ஆகியோருடன் இணைந்து பாலிகேப் என்ற சிறிய தொழில் நிறுவனத்தை இந்தர் ஜெய்சிங்கானி தொடங்கினார்.
முதலில், 2014 -ம் ஆண்டில் ஸ்விட்சுகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் ஃபேன்கள், எல்இடி லைட்டுகள பாலிகேப் தயாரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சிறிய கேரேஜில் வயர் தயாரிப்பை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் ஒரு புரொடக்ஷன் யூனிட்டை அமைத்தனர். இதன்பின்னர், பிவிசி இன்சூலேட்டடு வயர்கள், கேபிள்கள், பவர் கேபிள்கள், கண்ட்ரோல் கேபிள், பில்டிங் வயர்கள், கம்யூனிகேஷன் கேபிள்களை அடுத்தடுத்து தயாரித்தனர்.
ரூ.79,700 கோடி
இதனைத்தொடர்ந்து, வயர்களையும் கேபிள்களையும் உலகளாவிய தரத்திற்கு இந்தர் ஜெய்சிங்கானி தயாரிக்க தொடங்கினார். இதனால் அவரது வியாபாரம் பெறுகி, 2018 -ம் ஆண்டு உலக வங்கியின் நிதி நிறுவனமான இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிதியுதவி கிடைத்தது. மேலும் பாலிகேபின் பங்குகளையும் இந்நிறுவனம் வாங்கியது.
2019 -ம் ஆண்டு பாலிகேப் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டார். 2021 -ம் ஆண்டில் போர்ப்ஸின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தர் ஜெய்சிங்கானி இடம் பிடித்தார்.
தற்போது, இந்தர் ஜெய்சிங்கானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.53,000 கோடியாகவும், பாலிகேபின் சந்தை மதிப்பு ரூ.79,700 கோடியாகவும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |