சொத்து மட்டுமே பல கோடி.., இந்தியாவின் கோடீஸ்வர பாடகி யார் தெரியுமா?
இசையுலகை பொறுத்தளவில் பல பாடகர்கள் இன்று வரையில் வளர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பாடலை பாடி கோடிக்கணக்கில் பலர் சொத்தை சேமித்து வருகின்றனர்.
இந்தியா சினிமாவையே தனது குரல் வளத்தால் கட்டிப்போட்டவர் என்றால் அது, பாடகி ஸ்ரேயா கோஷல் தான். இவர் பல மொழிகளில் பாடல் பாடி ரூ.180 முதல் ரூ.185 கோடி வரை சொத்து வைத்துள்ளார்.
இவ்வளவு கோடிக்கு அதிபதியாக இருந்தாலும், இந்தியாவின் பணக்கார பாடகியாக முடியவில்லை. ஆம். இவருக்கு பதிலாக இந்தியாவின் பணக்கார பாடகி என்ற இடத்தில் வேறு ஒரு பாடகி இருக்கிறார்.
இந்தியாவின் கோடீஸ்வர பாடகி
இந்தியாவின் கோடீஸ்வர பாடகிக்கு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 200 கோடி என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல பாலிவுட் இசை தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் மகள் துளசி குமார் தான் அந்த பணக்கார பாடகி.
துளசி குமார் துவா, இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான பாடகர்களில் ஒருவர்.
பிரபல பாடகி, துளசி குமார் பல தசாப்தங்களாக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். துளசி 2006 ஆம் ஆண்டு Chup Chup Ke படத்தில் 'Mausam Hai Bada Qatil' மற்றும் 'Shabe Firaaq' ஆகிய பாடல்களைப் பாடியபோது பாடகியாக அறிமுகமானார்.
'லைக் பாத்ஷாலா', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை', 'ரெடி', 'தபாங் 2', 'ஆஷிகி 2', 'யாரியா', 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்', 'ராய்', 'சாஹோ', 'பாகி 3' போன்ற படங்களில் பின்னணி பாடகியாக இவர் அசத்தியிருப்பார்.
2009 ஆம் ஆண்டு தனது சொந்த ஆல்பத்தை வெளியிட்டார். இவரே இந்தியாவின் பணக்கார பாடகியாக இருந்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |