அமெரிக்காவில் விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளிப் பெண்: யார் அவர்?
சனிக்கிழமையன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்தார்கள். அவர்களில் இந்திய வம்சாவளியினரான பெண்ணொருவரும் அடங்குவார்.
விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளிப் பெண்
சனிக்கிழமையன்று, பண்டிகை ஒன்றை அனுசரிப்பதற்காக சிறிய ரக விமானம் ஒன்றில் ஒரு குடும்பம் புறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த ஆறு பேர் பலியானார்கள்.
பலியானவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி மருத்துவரான Dr ஜாய் சைனி ஆவார். Dr ஜாய் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்தவர்.
Dr ஜாய், தன் பெற்றோரான குல்ஜித் மற்றும் குருதேவ் சிங் ஆகியோருடன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.
பிற்ஸ்பர்க் பல்கலையில் மருத்துவம் பயின்ற Dr ஜாய், தன் சக மாணவரான Dr. மைக்கேலை ( Dr. Michael Groff) காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தம்பதியரின் மகளான கரீனா (Karenna Groff) பிரபல சாக்கர் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
சனிக்கிழமை நிகழ்ந்த துயர விபத்தில், Dr ஜாய், Dr. மைக்கேல், அவர்களுடைய மகளான கரீனா, கரீனாவின் காதலரான James Santoro, Dr ஜாய், Dr. மைக்கேல் தம்பதியரின் மகனான Jared Groff, Jaredஇன் காதலியான Alexia Couyutas Duarte ஆகிய ஆறு பேரும் உயிரிழந்துவிட்டார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |