19 வயதில் சுயமாக ரூ.500 கோடி சம்பாதித்த இளைஞர் - யார் இந்த ஜதின் ராவ்?
ஜதின் ராவ் என்ற இளைஞர் 19 வயதில் ரூ.500 கோடி சுயமாக சம்பாதித்துள்ளார்.
ஜதின் ராவ்
ஹரியானவை சேர்ந்த 19 வயதான ஜிதின் ராவ் இந்தியாவின் இளம் வயது மில்லியனர், இளம் வயதில் லம்போர்கினி வாங்கிய இந்தியர் என அறியப்படுகிறார்.
பெரும்பாலானோர், 13 வயதில் பள்ளிப்படிப்பு மற்றும் பொழுதுபோக்குகளில் மூழ்கியிருந்த போது, ஜிதின் ராவ் அந்த வயதில் பங்கு சந்தை மற்றும் டிரேடிங் கற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், தனது SJ2 என்ற யூடியூப் சேனல் மூலம் டிரேடிங் செய்வது குறித்து பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
19 வயதில் ரூ.500 கோடி
டிரேடிங் மூலம் பணம் சம்பாதிக்க தொடங்கிய ஜதின் ராவ், 17வயதிலே இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், 19 வயதில் தனது சுயசம்பாத்தியத்தின் மூலம் லம்போர்கினி காரை வாங்கியுள்ளார். தற்போது அவரின் நிகர சொத்துமதிப்பு ரூ.500 கோடி என மதிப்பிடப்படுகிறது.
இதன் மூலம், இந்தியாவின் இள வயது சுயசம்பாத்திய மில்லியனர் என்ற பெருமையை ஜிதின் ராவ் பெற்றுள்ளார்.
சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், பணம் சம்பாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை ஜிதின் ராவ் நிருபித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |