சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம் - யார் இந்த உலகின் அதிக ஊதியம் பெரும் CEO?
பொதுவாக உலகில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி யார் என கேட்டால், கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன CEO சத்ய நாதெல்லா ஆகியோரை தான் சொல்வார்கள்.
உலகின் அதிக ஊதியம் பெரும் CEO
ஆனால், Equilar அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு அதிக ஊதியம் பெரும் தலைமை செயல் அதிகாரியாக ஜிம் ஆண்டர்சன்(Jim Anderson) என்பவர் உள்ளார்.
Coherent நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிம் ஆண்டர்சன், கடந்த 2024 ஆம் ஆண்டு 101.50 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.855 கோடி) ஊதியமாக பெற்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஊதியமாக கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை 10.21 மில்லியன் டொலரும், மைக்ரோசாப்ட் நிறுவன CEO சத்ய நாதெல்லா 79.1 மில்லியன் டொலரும், ஆப்பிள் நிறுவன CEO டிம் குக் 74.6 மில்லியன் டொலரும் பெற்றுள்ளனர்.
ஜிம் ஆண்டர்சன் அடிப்படை சம்பளமாக 1.06 மில்லியன் டொலரும், கையொப்ப போனஸாக 5,00,000 டொலரும் பெற்றுள்ளார். 100 மில்லியன் டொலருக்கு அதிகமான தொகை பங்குகள் மூலம் கிடைத்துள்ளது.
யார் இந்த ஜிம் ஆண்டர்சன்?
52 வயதான ஜிம் ஆண்டர்சன், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் Coherent நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் Coherent நிறுவனம், நெட்வொர்க்குகள் மற்றும் லேசர் அமைப்புகளுக்கான உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு முதல் Lattice Semiconductor நிறுவன தலைமை செயல் அதிகாரியாகவும், intel, AMD போன்ற நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்பை வகித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |