இந்தியாவில் டெஸ்லாவின் சைபர்டிரக் வைத்துள்ள ஒரே நபர் - யார் இந்த லாவ்ஜி டாலியா?
டெஸ்லாவின் சைபர்டிரக் வாகனத்தை இந்தியாவில் ஒருவர் மட்டுமே வாங்கியுள்ளர்.
சைபர்டிரக்
மின்சார கார் சந்தையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு சைபர் டிரக் காரை அறிமுகப்படுத்தியது.
இந்த கார் அதனது தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. டெஸ்லாவின் சைபர் டிரக் வாகனத்தை, இந்தியாவில் இதுவரை ஒருவர் மட்டுமே வாங்கியுள்ளார்.
இதுவரை டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது காரை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தாத நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு டெஸ்லா ஷோரூமில், ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த வாகனத்தை குஜராத்தை சேர்ந்த லாவ்ஜி முன்பதிவு செய்துள்ளார்.
இந்த வாகனத்தின் அடிப்படை விலை ரூ.60 லட்சமாக இருந்தாலும், இறக்குமதி வரி உட்பட இந்தியாவிற்கு காரை கொண்டு வர ரூ. 1 கோடி ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
காரை வாங்கிய லாவ்ஜி, துபாய்க்கு கொண்டு சென்று அங்கு காரை பதிவு செய்து விட்டு, கடல் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் சைபர்டிரக்
மேலும், சைபர்ட்ரக்கில் தங்கள் நிறுவனத்தின் பெயரான 'கோபின்' என்பதை பொறித்துள்ளனர்.
முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் இந்த காரை, முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கி.மீ வரை பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கார் குறித்து பேசிய லாவ்ஜியின் மகன் ப்யூஸ், இந்த காரை ஓட்டுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. டெஸ்லாநிறுவனம் இந்தியாவில் தனது ஷோரூமைத் திறக்கும் என நம்புகிறோம். இந்திய கார் பிரியர்களிடையே இந்த வாகனத்திற்கு அதிக தேவை உள்ளது.
தற்போது, நாங்கள் இந்த காரை சூரத்தில் மட்டுமே பயன்படுத்துகிறோம். வேறு எங்கும் இதன் மூலம் பயணம் மேற்கொள்ளவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும், இந்த காரைப் பார்க்க 50 முதல் 100 பேர் அந்த இடத்திலேயே கூடி விடுகிறார்கள்.
காரின் வெளிப்பகுதிகள், கூர்மையான வளைவுகளைக் கொண்ட துருப்பிடிக்காத எஃகால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கரடுமுரடான பாதைகளிலும் இயங்கக்கூடிய வகையில் இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Tesla @cybertruck driving on the streets of Surat, Gujarat 😍⚡
— Tesla Club India® (@TeslaClubIN) April 24, 2025
📐 is huge🔋
🎥: insta iamsuratcity https://t.co/UdnpASlb7A pic.twitter.com/J0wV3sk65M
குஜராத்தின் பாவ்நகரை சேர்ந்த லாவ்ஜி டாலியா, தனது 13 வயதில் சூரத்திற்கு சென்று வைரத்தை பாலிஷ் செய்யும் வேலை செய்து வந்தார். தனது கடும் உழைப்பால் பெரும் வைர வியாபாரியாக உயர்ந்த அவர், ஜவுளித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் கால் பதித்தார்.
குஜராத் பாட்ஷா
கோபின் டெவலப்பர்ஸ், கோபின் அறக்கட்டளை, கோபின் வென்ச்சர்ஸ் (முதலீடுகள்) ஆகியவற்றை உள்ளடக்கிய கோபின் குழுமத்தின் நிறுவனரான லவ்ஜி டாலியா, தனது சமூக சேவைகளின் காரணமாக குஜராத் மக்களால் பாட்ஷா என அழைக்கப்படுகிறார்.
2017 ஆம் ஆண்டில், 'பாட்ஷா சுகன்யா ஸ்மிருதி யோஜனா' திட்டத்தின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை கொண்ட படேல் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு வங்கிப் பத்திரங்களை வழங்கினார் லவ்ஜி டாலியா.
2வது பெண் குழந்தைக்காக வழங்கப்படும் ஒவ்வொரு பத்திரமும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைந்து, பெண்களின் உயர்கல்வி அல்லது திருமணத்தை ஆதரிக்கும் நோக்கில் ரூ.2.31 லட்சம் இழப்பீடு வழங்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |