Monkey Pox வைரஸ் தொற்று யாரை அதிகம் தாக்கும் தெரியுமா?
Monkeypox
Monkeypox virus
By Kishanthini
மங்கி பாக்ஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகின்றது.
இது முதலில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி, பின்பு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த தொற்று காய்ச்சல், நிமோனியா, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக இந்த தொற்று யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகளும் ஆபத்தும் அதிகம், அறிகுறிகள் என்ன என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாருக்கு அதிக ஆபத்து?
- மங்கி பாக்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் (உடலுறவு உட்பட) இருப்பவர்களுக்கு இந்நோய் தொற்று பரவுவதற்கான ஆபத்து மிக அதிக அளவில் இருக்கிறது.
- விலங்குகளுடன் அதிகமாக தொட்டு பழகுவது, வளர்ப்பது, அதிக தொடர்பில் இருப்பவர்களும் அதிக ஆபத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள்.
- மங்கி பாக்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கையாள்கிற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தொற்று பரவும் ஆபத்து அதிகம்.
- பிறந்த கைக்குழந்தைகள், சிறு வயது குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த மங்கி பாக்ஸ் வைரஸ் தாக்குதல் ஆபத்து மற்றவர்களைக் காட்டிலும் அதிகம்.
தொற்றின் அறிகுறிகள் என்னென்ன.?
மங்கி பாக்ஸ் நோய்த் தொற்றின் அறிகுறிகள் ஒருவருடைய உடலில் குறைந்தபட்சம் 6 முதல் 13 நாட்கள் வரை நிலைத்திருக்கும். நோய்த் தொற்று வெளியில் தெரிய ஆரம்பித்து அதிகரிக்கும் போது கிட்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை இது தொடரலாம்.
- அதிக காய்ச்சல்
- தலைவலி
- தசைவலி
- முதுகுவலி
- உடல் வீக்கம்
-
நடுக்கம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US