யார் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது தெரியுமா? வெளியான முழு விபரம்
தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்பு நகைக்கடன் தள்ளுப்படிக்கான அரசாணையை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இதன் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், இதனால் நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் நகைக்கடன் அடகு வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதில் யார் யாருக்கு தள்ளுபடி கிடையாது என்ற விபரம் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது அது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்(5சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், எந்த பொருளுடன் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோரின் நகைக்கடன்கள் தள்ளுப்படி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.