இளவரசர் ஹரியின் தந்தை யார்? நெட்ப்ளிக்ஸ் தொடரால் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடரால் ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக ஹரி தொடர்பிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
ஹரி தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடரில், ராஜ குடும்பத்தை அவமதிக்கும் விடயத்தில் பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், குறும்புக்கார ரசிகர்கள் சிலரோ, ஹரி மீதே சர்ச்சையைத் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
ஆம், அந்த நெட்ப்ளிக்ஸ் தொடரில் ஒரு விடயம் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது, இளவரசர் ஹரியின் தலைமுடி.
Image: Getty Images
இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?
இளவரசர் சார்லசைப்போலவே, இளவரசி டயானாவும் தங்கள் திருமண வாழ்வுக்கு துரோகம் செய்தவர் என்பதை உலகமே அறியும்.
அவ்வகையில், இளவரசி டயானா, சார்லசுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே தனது பாதுகாவலராக இருந்த James Hewitt என்பவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக, அவரே பிபிசி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி, சார்லசின் மகன் அல்ல என்றும், James Hewittதான் ஹரியின் மகன் என்றும் செய்திகள் உலாவரத் துவங்கின.
இந்நிலையில், தற்போது ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ஹரியின் தலைமுடி மற்றும் அவரது தாடியைப் பார்த்து, இவர் சார்லசின் மகனாக இருக்க முடியாது, James Hewittதான் ஹரியின் தந்தையாக இருக்கமுடியும் என்ற புரளியை மீண்டும் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
Image: Getty Images