தன் உண்மையான தந்தை யார் என்பது குறித்து உலவும் வதந்திகள்: முதன்முறையாக மௌனம் கலைத்த இளவரசர் ஹரி!
இளவரசர் ஹரி தன் தந்தை யார் என்பது குறித்து நீண்ட காலமாக உலவும் வதந்திகள் குறித்து முதன்முறையாக தனது புத்தகத்தில் மனம் திறந்துள்ளார்.
இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை இளவரசி டயானாவின் காதலரா?
இளவரசர் ஹரி எழுதியுள்ள அவரது வாழ்க்கை சரிதமான Spare என்னும் புத்தகம் தவறுதலாக முன்கூட்டியே ஸ்பெயின் நாட்டில் வெளியாகியுள்ள நிலையில், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பல பரபரப்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.
அவற்றில் ஒன்று, இளவரசர் ஹரி, தனது உண்மையான தந்தை யார் என்பது குறித்து உலவிவரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளதாகும்.
இளவரசி டயானா உயிரிழப்பதற்குமுன், தான் 1980களில் Major James Hewitt என்பவருடன் முறைதவறிய உறவு வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார். அவர் உயிரிழந்துவிட்டாலும், அந்த விடயம் இன்னமும் ராஜ குடும்பத்தினரை, குறிப்பாக இளவரசர் ஹரியை வாட்டி வதைத்துவருகிறது.
Image: GETTY
வதந்திகளுக்கு ஹரி அளித்துள்ள பதில்
தன் உண்மையான தந்தை யார் என்பது குறித்து உலவும் தகவல்கள் குறித்து தனது புத்தகத்தில் நேரடியாக பதிலளித்துள்ள இளவரசர் ஹரி, என் உண்மையான தந்தை என் தாயின் முன்னாள் காதலர்களில் ஒருவரான James Hewitt என உலவி வந்த வதந்தி வேடிக்கையாக இருந்தது.
அப்படி ஒரு வதந்தி பரவ ஒரு காரணம் James Hewittஇன் முடியின் நிறம். மற்றொன்று, மற்றவர்களை வருத்தப்படுத்தி அதில் மகிழும் குணம். சமூக ஊடக வாசகர்களுக்கு இளவரசர் சார்லசின் இளைய மகன் அவருக்கு பிறந்தவர் அல்ல என்னும் கருத்து மிகவும் பிடித்திருந்தது. சில காரணங்களால் அந்த ஜோக், அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவேயில்லை என்று கூறியுள்ளார் ஹரி.
தன்னை ஒரு வேடிக்கைப் பொருளாக, அல்லது கோமாளியாக காட்டுவதற்காக அப்படி ஒரு வதந்தி உருவாக்கப்பட்டதோ என வியக்கிறார் அவர்.
தான் பிறக்கும்வரை தன் தாய் டயானா Major Hewittஐ சந்திக்கவில்லை என்றபோதும், அந்த வதந்திகளை மக்கள் இன்னமும் நம்புகிறார்கள் என்கிறார் ஹரி.
எல்லாம்போக, அந்த வதந்தி உண்மைதானா என்பதை உறுதிசெய்வதற்காக, தனது டி என் ஏ விவரங்களை சேகரிக்க ஊடகவியலாளர்கள் கடும் முயற்சி செய்தார்கள் என்னும் அதிரவைக்கும் தகவலையும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.