ரோஷினி நாடார் vs ஈஷா அம்பானி - யாரிடம் அதிக சொத்து உள்ளது தெரியுமா?
இந்தியாவின் இரு பெரும் கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசுகளான ஈஷா அம்பானி மற்றும் ரோஷினி நாடாரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஈஷா அம்பானி
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி(isha ambani).
33 வயதான ஈஷா அம்பானிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் பிரமல் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
ஈஷா அம்பானி, அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தெற்காசிய ஆய்வுகளில் பட்டப்படிப்பும், ஸ்டான்போர்டில் எம்பிஏ படிப்பையும் முடித்துள்ளார்.
தற்போது, ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் டிஜிட்டல் விரிவாக்கத்தை வடிவமைத்து வருகிறார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிராண்டுகளான அஜியோ(ajio), டிரா(Tiro) ரிலையன்ஸ் வாங்கிய Netmeds, 7-Eleven, Freshpik, Coverstory, Hamleys ஆகிய நிறுவனங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனங்களின் மூலமாக ஈஷா அம்பானியின் நிகர சொத்து சுமார் ரூ.835 கோடியாக உள்ளது.
ரோஷினி நாடார்
47 வயதான ரோஷினி நாடார்(roshni nadar), HCL நிறுவனர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ஆவார். இவருக்கு ஷிகர் மல்ஹோத்ரா என்பவருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் மற்றும் கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில், நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் ரோஷினி நாடார்.
தொடக்கத்தில், பன்னாட்டு ஊடக நிறுவனங்களில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றிய ரோஷினி நாடார், HCL நிறுவனத்தில் இணைந்த ஒரு வருடத்தில் CEO ஆக நியமிக்கப்பட்டார்.
HCL தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகிய பிறகு, ரோஷினி நாடார் அந்த பொறுப்பை ஏற்றார். மேலும், ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை இல்லாமல் நடத்திவருகிறார்.
ஷிவ் நாடார் தன் வசமிருந்த 50% பங்குகளில், 47% பங்குகளை தனது ஒரே மகளான ரோஷினி நாடாருக்கு வழங்கிய பின்னர், ரோஷினி நாடாரின் சொத்துமதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஈஷா அம்பானியை விட ரோஷினி நாடார் அதிக சொத்துக்களை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |