சத்குரு, பாபா ராம்தேவ் உட்பட இந்தியாவின் பிரபலமான சாமியார்களில் யார் பெரும் கோடீஸ்வரர்
இந்தியாவில் ஆன்மீக வழிகாட்டிகள் என அறியப்படும் சாமியார்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாடற்ற சொத்துக்கள் ஆகியவை ஒளிவு மறைவற்றவை என்றே கூறப்படுகிறது.
போலே பாபா சாமியார்
உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்த விவகாரத்தில் தற்போது போலே பாபா என்ற சாமியார் ஊடக கவனம் பெற்றுள்ளார்.
அத்துடன், அவரது சொத்துக்கள் குறித்தும் பரவலாக பேசப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் உட்பட பல்வேறு இடங்களில் மாளிகைகள் மற்றும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள போலே பாபா சாமியாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 100 கோடிக்கும் அதிகம் என்றே கூறுகின்றனர்.
இதேப் போன்று, சாமியார்களின் பெயர்கள் ஊடக கவனம் பெறும் போது முதலில் கூறப்படும் பெயர் பாபா ராம்தேவ். ஹரியானாவில் வேளாண் குடும்பத்தில் பிறந்த பாபா ராம்தேவ், ஹரித்வாரில் நீண்ட காலம் யோகா கற்பித்தார்.
இன்று அவர் பதஞ்சலி யோகபீடம் மற்றும் திவ்ய யோக மந்திர் அறக்கட்டளையின் கீழ் பல்வேறு கிளைகளுக்கு தலைமை தாங்குகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 1,600 கோடி என்றே Navbharat Times நாளேடு பட்டியலிட்டுள்ளது.
நித்யானந்தா தியானபீடம்
இன்னொருவர் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். யோகா மையங்கள், கல்வி நிலையங்கள் என ஆதிக்கம் செலுத்தும் இவரது சொத்து மதிப்பு ரூ 18 கோடி என்றே கூறப்படுகிறது.
இன்னொருவர் பல நாடுகளில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். பலர் இவரது Art of Living அறக்கட்டளைக்கு தாராளமாக நன்கொடை அளிக்கின்றனர்.
அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 1,000 கோடி என கூறப்படுகிறது. கடைசியாக நித்யானந்தா தியானபீடத்தை நிறுவியவரான சுவாமி நித்யானந்தா.
இவரது தியானபீடத்தினூடாக உலகளவில் கோவில்கள், குருகுலங்கள் மற்றும் ஆசிரமங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ 10,000 கோடி என்றே கூறப்படுகிறது.
இவர் இந்தியாவை விட்டு வெளியேறி தற்போது கைலாசா என்ற புதிய நாடு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |