ரூ.1700 கோடி சொத்துமதிப்பு.., இந்தியாவின் பணக்கார பாடகர்: யார் தெரியுமா?
இந்தியாவின் பணக்கார பாடகர் இயக்குனர் மணிரத்னம் மூலம் இசையமைப்பாளர் ஆன ஏ.ஆர்.ரகுமான் தான்.
தமிழ் சினிமாவின் 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
கோலிவுட்டில் தொடங்கிய ரகுமானின் இசைப்பயணம் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், ஹாலிவுட் என 2000க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார்.

முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான், இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மேலும், 30க்கும் மேற்பட்ட Filmfare Awards, 2 Oscar Awards, Grammy Award, BAFTA உட்பட உலகம் முழுவதும் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
அதேபோல், வந்தே மாதரம் உள்ளிட்ட பல பிரபலமான ஆல்பங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரகுமான் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி மாதம் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருமானம் ஈட்டும் ஏ.ஆர்.ரகுமான், ஆண்டுக்கு ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை சம்பாதிக்கிறார்.
மேலும், இவரிடம் Audi, BMW, Volvo, Benz உள்ளிட்ட சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.1700 கோடிக்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |