28 ஆண்டுகளுக்கு பிறகு.. 33 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்த சரன்ஷ் ஜெயின்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரன்ஷ் ஜெயின்
இதில், சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான சரன்ஷ் ஜெயின், முதல்முறையாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டில் ராபின் சிங்குக்குப் பிறகு 33 வயதில் அறிமுகமாகும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சரன்ஷ் ஜெயின் பெற உள்ளார்.
சரன்ஷ் ஜெயின், முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபோத் ஜெயினின் மகன் ஆவார்.

ஆல் ரவுண்டரான சரன்ஷ் ஜெயின் 54 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 2223 ஓட்டங்களும், 188 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
2025 - 26 ரஞ்சி கிண்ணத் தொடரில், 57 சராசரியில் 518 ஓட்டங்களும், 20 சராசரியில் 30 விக்கெட்டுகளும் எடுத்தார்.

2025 ஆம் ஆண்டு துலிப் கிண்ண தொடரில் மத்திய மண்டல அணிக்காக விளையாடிய அவர், 2போட்டிகளில் 2 அரைசதங்கள் அடித்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடரில், 360 ஓட்டங்கள் மற்றும் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' வென்றார்.
வாஷிங்டன் சுந்தர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரன்ஷ் ஜெயினுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |