உலகின் 11வது பணக்காரராக மாறியுள்ள முகம் அறியாத மர்மநபர் - யார் இந்த சதோஷி நகமோட்டோ?
முகம் அறியாத நபர் உலகின் 11வது பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
பிட்காயின்
டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து, தற்போது ஒரு கோடியை கடந்துள்ளது.
இதன் காரணமாக, பிட்காயின் நிறுவனர் உலக பணக்காரர் பட்டியலில் 11வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, முகம் அறியாத சதோஷி நகமோட்டோ(satoshi nakamoto) என்பவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இந்த பெயர் கூட அவரின் புனைபெயராகவே கருதப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி, அமெரிக்காவை சேர்ந்த நபர், 10,000 பிட்காயினுக்கு 2 பீட்சாக்களை வாங்கினார்.
இதுவே முதல் பிட்காயின் பரிவர்த்தனை ஆகும். இதனை நினைவு கூறும் வகையில், மே 22 ஆம் திகதி பிட்காயின் பீட்சா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
யார் இந்த சதோஷி நகமோட்டோ?
2010 வரை மென்பொருளுக்கு பங்களிப்பு செய்து வந்த அவர், அதன் பிறகு முற்றிலும் மாயமாகி விட்டார். சதோஷி நகமோட்டோ யார் என்ற விவாதம் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதில், மென்பொருள் உருவாக்கிய ஹால் ஃபின்னி, எலான் மஸ்க், ஜாக் டார்சி உள்ளிட்ட பலரின் பெயர்களும் இந்த விவாதத்தில் இடம்பெறுகிறது. ஆனால் அவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரெய்க் ரைட் தான் சடோஷி நகமோட்டோ என்று கூறிக்கொண்டார். ஆனால், நீதிமன்றம் அதற்கு ஆதாரம் இல்லை என கூறி 12 மாத சிறைத்தண்டனை விதித்தது.
அவர், 37 வயதுடைய ஜப்பானியர் எனக் கூறப்பட்டாலும், இவரது செயல்பாட்டு நேரங்கள் பிரித்தானியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
11வது உலக பணக்காரர்
சதோஷி நகமோட்டோவிடம் 10.96 லட்சம் பிட்காயின்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 128.92 பில்லியன் டொலர் ஆகும்.
இதன் மூலம், 124.8 பில்லியன் டொலருடன் உலக பணக்காரர் பட்டியலில் 11வது இடத்தில் உள்ள டெல்(Dell) நிறுவனர் மைக்கேல் டெல்லைப் பதிலாக நகமோட்டோ முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
If bitcoin does its normal 50%/ann then Satoshi will pass Buffett this year and Zuck sometime next year-ish to be #2 richest in world (Elon has huge lead). It's fascinating to ponder that the founder of something so successful never cashed in. It echoes Jack Bogle in that regard https://t.co/tu9MRzUD5h
— Eric Balchunas (@EricBalchunas) June 2, 2025
பிட்காயின் 50 சதவீத வருடாந்திர வளர்ச்சியைத் தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நகமோட்டோ உலகின் இரண்டாவது பணக்காரராக மாறக்கூடும் எனவும், எதிர்காலத்தில் உலகின் முதல் பணக்காரராக மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |