3 லட்சம் கோடி சொத்து - இந்தியாவின் பணக்கார பெண் யார் தெரியுமா?
2025ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியளை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பணக்காரர் பட்டியல்
இந்த பட்டியலில், உலகளவில் 342 பில்லியன் டொலர்களுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்திலும், 216 பில்லியன் டொலர்களுடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திலும், 215 பில்லியன் டொலர்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 3வது இடத்திலும் உள்ளனர்.
இதே போல் இந்திய அளவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 92.5 பில்லியன் டொலர்களுடன் இந்திய அளவில் முதலிடத்திலும், உலகளவில் 18 வது இடத்திலும் உள்ளார்.
இதனையடுத்து, அதானி குழும தலைவர் கௌதம் அதானி 56.3 பில்லியன் டொலர்களுடன் இந்திய அளவில் 2வது இடத்திலும், உலகளவில் 28 வது இடத்திலும் உள்ளார்.
யார் இந்த சாவித்திரி ஜிண்டால்?
அடுத்தபடியாக, ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால், 35.5 பில்லியன் டொலர்களுடன் இந்திய அளவில் 3வது இடத்திலும், உலகளவில் 56 வது இடத்திலும் உள்ளார். மேலும், இவர் இந்தியாவின் பணக்கார பெண்ணாக கருதப்படுகிறார்.
சாவித்திரி ஜிண்டால் பிரபல தொழிலதிபர் ஓ.பி. ஜிண்டாலின் மனைவி ஆவார். ஓ.பி. ஜிண்டாலின் மறைவுக்கு பின்னர் சாவித்திரி ஜிண்டால், ஜிண்டால் குழுமத்தின் தலைவராக உள்ளார்.
2005 மற்றும் 2009 ஹரியானாசட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற சாவித்திரி ஜிண்டாலுக்கு 2009 ஆம் ஆண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதன் பிறகு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவருக்கு, 2024 சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்க மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜிண்டால் குழுமம் இரும்பு, மின்சாரம், எரிபொருள், சிமெண்ட் என பல துறைககளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |