முன்பு செக்யூரிட்டி.., இன்று உயிரை கொடுத்து விளையாடி அவுஸ்திரேலியாவை மிரள வைத்தவர்: யார் இந்த Shamar Joseph?
Gabba Test போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிபெற வைத்துள்ள Shamar Joseph யார் என்பதை பார்க்கலாம்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி
Australia மற்றும் West Indies அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வேகப்புயல் Shamar Joseph.
இதற்கு முந்தைய நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வீசிய பந்தில் Shamar Joseph காலில் காயமடைந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Yesterday - West Indies players were carrying Shamar Joseph due to an injured toe.
— Johns. (@CricCrazyJohns) January 28, 2024
Today - Shamar Joseph carried West Indies with an injured toe.
What a story. ❤️ pic.twitter.com/jX02uVrNk1
ஆனால், அதற்காக தனது பந்துவீச்சில் முழுபலத்தையும் காண்பிக்க வேண்டும் என்று உயிரைக் கொடுத்து விளையாடி 12 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
யார் இந்த Shamar Joseph?
கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் Shamar Joseph (24). இந்த கிராமத்தில் மொத்தம் 350 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு பிறந்த Shamar Joseph கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் ஒரு காவலாளியாக 12 மணி நேர ஷிப்டில் பணியாற்றினார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட Shamar Joseph, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடினார்.
தற்போது Gabba Test playing XI -ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையை உருவாக்கிய இளம்புயலாக உருவெடுத்துள்ளார். இவரை பற்றிய இன்னும் பல தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |