ஆங்கிலத்தின் தந்தை யார்? ஒரு சுவாரஸ்ய தகவல்
ஆங்கில மொழியில் ஒவ்வொரு துறைக்கும் தந்தை போன்று பலர் இருந்தனர்.
அதில் ஜெஃரி ஷாசர் (Geoffrey Chaucer) என்பவர் ஆங்கில இலக்கியத்தின் தந்தையாக கருதப்படுபவர். அவர் 1344லிலோ அல்லது ஓரிரு ஆண்டுகள் முன்னோ பிறந்தவர். அவர் ஒரு எழுத்தாளர், கவி, அரசசபை அதிகாரி, அரசாங்க தூதர், மற்றும் கொடையாளி.
அதுபோல லிண்ட்லே மர்ஃபி (Lindlay Murphy) என்பவர் ஆங்கில இலக்கணத்தின் தந்தை ஆவார். அவர் அமெரிக்காவில் முக்கிய நீதிபதியாக இருந்து பின்னர் 1785ல் இங்கிலாந்தில் குடியேறி, இலக்கிய இலக்கண துறைகளில் புத்தகங்கள் வெளியிட்டார்.
வில்லியம் டிண்டேல் (William Tyndale) என்பவர் ஆங்கில உரைநடை தந்தை போன்றவர்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) ஆங்கில நாடகத்தின் தந்தை.
ஃப்ரான்ஸிஸ் பேகன் (Francis Bacon) என்பவர் ஆங்கில கட்டுரை தந்தை ஆவார்.
ஹென்றி ஃபீல்டிங் (Henry Fielding) ஆங்கில நாவல் தந்தை ஆவார்.
இதுபோல மற்ற பிரிவுகளில் மற்றும் பலர் உள்ளனர்.