ரூ. 300 கோடி.., இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்: யார் தெரியுமா?
இந்திய திரையுலகில் உள்ள பணக்கார நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர்.
நடிகர் அல்லு அர்ஜுன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு ரூ 300 கோடி வசூலிக்கிறார்.
இதன் மூலம் தளபதி விஜய்யை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலம், பல பிரபல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி என்று கூறப்படுகிறது.
மேலும் மும்பையில் உள்ள முக்கிய நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுன் வீட்டில் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். BMW, ரேஞ்ச் ரோவர், ஆடி போன்ற கார் நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்கள் இவரிடம் உள்ளன.
மேலும் கைக்கடிகாரங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட இவர் சாண்டோஸ் 100XL என்ற உயர்ரக கடிகாரத்தை வைத்திருக்கிறார். இதன் விலை ரூ.4.44 லட்சம். ரோலக்ஸ் வாட்சும் இவரிடம் உள்ளது.
அல்லு அர்ஜுனிடம் வேனிட்டி வேனும் உள்ளது. இதன் விலை மட்டும் சுமார் ரூ.7 கோடி என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |