தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை.., யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் அறிமுகமாகி 20 ஆண்டுகளை முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "மௌனம் பேசியதே" திரைப்படத்தில் முதன்முதலில் நாயகியாக திரிஷா அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நாயகியாக கடந்த ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திரிஷா.
சில ஆண்டுகளுக்கு முன் இவரது மார்க்கெட் சரிந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததை தொடர்ந்து 96 படத்தின் மூலம் கம்பேக்கை கொடுத்தார்.
அதைதொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தார்.
சமீபத்தில் தளபதி விஜயுடன் லியோ, தி கோட் படத்தில் நடித்த திரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாகி நடித்து வருகிறார்.
தற்போது தல அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் "தக் லைப்" படத்திலும் திரிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில், கமலின் தக் லைப் படத்தில் நடிக்க திரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திரிஷா உள்ளார்.
அதேபோல் வேறு சில தொழில்களையும் செய்துவரும் அவருக்கு அதன் மூலமும் கோடி கோடியாக வருமானம் வருகிறதாம்.
அவரிடம் BMW Regal (ரூ.5 கோடி), Benz S Class (ரூ.80 லட்சம்), BMW 5 Series (ரூ.75 லட்சம்) உள்ளிட்ட சொகுசு கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 88 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |