கோடிகளில் சொத்துமதிப்பு.., இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் யார் தெரியுமா?
தற்போது பல ஹீரோக்கள் வில்லன் கதாபாத்திரத்தில் எந்த தயக்குமும் இல்லாமல் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன், சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சயிஃப் அலிகான், பாபி தியோல் உள்ளிட்ட ஹீரோக்கள் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பெரிய ஹீரோக்கள் தான் வில்லன் ரோலில் நடித்து வருகின்றனர்.
ஆனால் இந்த நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், கேஜிஎஃப் புகழ் யாஷ் தான் இந்திய சினிமா வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வில்லனாக மாறிவிட்டார்.
நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் யாஷ் தான் ராவணனாக நடிக்க உள்ளர்.
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க உள்ளனர்.
ரூ .835 கோடி என்ற அதிக பட்ஜெட்டில் மிகவும் விலையுயர்ந்த படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக யாஷ் இருக்கிறார். எனவே இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் இருந்து 20 -30% பங்கை பெறப்போகிறார்.
அதன்படி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்து யாஷுக்கு லாபம் கிடைக்கும்.
குறைந்தபட்சம் அவருக்கு ரூ .200 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இதன் மூலம் இந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் வில்லனாக யாஷ் மாற உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் நடிகர் யாஷின் சொத்து மதிப்பு மொத்தம் 65 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் வசிக்கும் யாஷின் அப்பார்ட்மெண்ட் விலை 6 கோடி என சொல்லப்படுகிறது.
அதேபோல் விதவிதமான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் யாஷ். சுமார் 90 லட்சம் மதிப்புடைய Mercedes Benz GLS 7 சீட்டர், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mercedes GLC 250D Coupe, a 5-seater, 80 லட்சம் மதிப்பிலான Audi Q7, 70 லட்சம் மதிப்புடைய BMW 520D, 40 லட்சம் மதிப்பிலான Pajero Sports ஆகிய கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |