Nvidia அடுத்த CEO யார்? போட்டியாளர்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளியினர்!
Who is the next Nvidia CEO? 3 Indian-Origin Executives in the race list: என்விடியா நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி யார் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா, தாமஸ் குரியன் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக தொடர்ந்து வருகின்றனர்.
Nvidia CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப்(Chip) தயாரிப்பு நிறுவனமான என்விடியா-வின்(Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஜென்சன் ஹுவாங்(Jensen Huang) தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார்.

சீன பெண் உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹவாங்(Alice Huang) என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தான் நீண்ட காலமாக வகித்து வந்த CEO பதவியை ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து என்விடியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி(CFO) கோலெட் கிரெஸ்(Colette Kress) தற்காலிகமாக என்விடியாவின் CEO-வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
புதிய CEO-க்கான போட்டியில் 3 இந்திய வம்சாவளியினர்!
இந்நிலையில் Nvidia நிறுவனம் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நிறுவனத்தின் உள்ளேயும், நிறுவனத்திற்கு வெளியேயும் தகுதியான நபர்களை தீவிரமாக தேடி வருகிறது.
என்விடியா நிறுவனத்தை உலகளாவிய AI சக்தியாக மாற்றிய ஜென்சன் ஹுவாங்-க்கு மாற்றாக தற்போது 11 முக்கிய நபர்களை என்விடியாவின் புதிய CEO-வாக நியமிப்பதற்காக பரிசீலித்து வருகிறது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 தொழில்நுட்பத் தலைவர்களும் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் அந்த 3 இந்திய வம்சாவளியினர்?
சஞ்சய் மெஹ்ரோத்ரா(CEO,Micron Technology)
40 ஆண்டுகளாக செமிகண்டக்டர் துறையில் அனுபவம் கொண்ட சஞ்சய் மெஹ்ரோத்ரா(Sanjay Mehrotra) Nvidia நிறுவனத்தின் அடுத்த CEO-க்கான போட்டியில் வலுவான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

மைக்ரான் நிறுவனத்தின் வன்பொருட்களை(hardware) என்விடியா நிறுவனம் அதிக அளவு கொள்முதல் செய்து வருவதால் சஞ்சய் மெஹ்ரோத்ராவுக்கு என்விடியா நிறுவனத்துடனான உறவு மிக நெருக்கமானதாக உள்ளது.
2017ம் ஆண்டு மைக்ரான் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மெஹ்ரோத்ரா AI சர்வர்களுக்கு தேவையான அதிவேக மெமரி சிப்கள்(High-bandwidth memory chips) தயாரிப்பில் நிறுவனத்தை முதன்மைப்படுத்தினார். 2016ம் ஆண்டு சான்டிஸ்க் நிறுவனம் விற்கப்படும் வரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சய் மெஹ்ரோத்ரா பணியாற்றியுள்ளார்.
நிகேஷ் அரோரா(CEO, Palo Alto Networks)
சைபர் பாதுகாப்பு நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸை(Palo Alto Networks) கடந்த 2018ம் ஆண்டு முதல் முன்னின்று வழிநடத்தி வரும் நிகேஷ் அரோரா(Nikesh Arora) பெயரை என்விடியா நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தரப்பு பரிந்துரைத்து வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிகேஷ், SoftBank நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
தாமஸ் குரியன்(CEO, Google Cloud)
என்விடியா நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் கூகுள் கிளவுட்(Google Cloud) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் குரியன்(Thomas Kurian) வலுவாக இருப்பதாக Axios ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கூகுள் கிளவுட் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, நிறுவன மென்பொருள்கள் மற்றும் AI சேவைகளை ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.
மற்ற போட்டியாளர்கள்
இந்திய வம்சாவளி போட்டியாளர்களை தவிர, இதில் கோலெட் கிரெஸ்(Colette Kress) இயன் பக்(Ian Buck), ரெனீ ஹாஸ்(Rene Haas), பேட் கெல்சிங்கர்(Pat Gelsinger), லிசா சூ(Lisa Su), மேட் மர்பி(Matt Murphy), ஜானி ஸ்ரூஜி(Johny Srouji), டிம் குக்(Tim Cook) ஆகியோரும் போட்டியாளராக உள்ளனர்.