கோடிகளில் சொத்துமதிப்பு.., இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா?
இந்தியாவின் மிகவும் அதிகாரமிக்க பதவிகளில் முக்கியமானது முதலமைச்சர் பதவி.
முதலமைச்சர் என்பவர் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவராக உள்ளார்.
அந்தவகையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார முதலமைச்சர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
1. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவரான சந்திரபாபு நாயுடு பலமுறை முதலமைச்சராக இருப்பதுடன் புத்திசாலி தொழிலதிபராகவும் உள்ளார்.
அவர் ரூ.810 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.121 கோடி அசையா சொத்துக்களும் வைத்திருக்கிறார். மேலும் அவரது மொத்த சொத்து மதிப்பு ₹931.83 கோடி என்று சொல்லப்படுகிறது.
2. இரண்டாவது இடத்தில பாரதிய ஜனதா கட்சியின் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பில் ரூ.165 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.167 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3. மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பில் ரூ.21 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.30 கோடி அசையா சொத்துக்களும் அடங்கும்.
4. நான்காவது இடத்தில் நாகாலாந்தின் தற்போதைய முதல்வர் நீபியு ரியோ இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ₹46.95 கோடியாகும்.
5. ஐந்தாவது இடத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளார். அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.42.05 கோடி.
6. அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த N. ரங்கசாமி ஆறாவது பணக்கார முதல்வராக உள்ளார். அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 38 கோடியாகும்.
7. ஏழாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலங்கான முதல்வரான ரேவந்த் ரெட்டி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 30 கோடியாக உள்ளது.
8. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன் எட்டாவது பணக்கார முதலமைச்சராக உள்ளார். அவரிடம் 25 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளது.
9. அசாம் மாநிலத்தின் முதல்வர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா ஒன்பதாவது பணக்கார முதலமைச்சராகவும் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 7 கோடியாகும்.
10. மேகாலயா முதல்வரான கொனார்ட் சங்மா பத்தாவது பணக்கார முதலமைச்சராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 14 கோடி ரூபாய்.
மேலும், நமது தமிழ்நாட்டு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் பதினான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |