ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்பு உடையவர் யார் தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்
பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்புடையவர், நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணியாராகத்தான் இருக்க முடியும் இல்லையா?
ஆனால், உண்மையில் ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்புடையவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்புடையவர் யாராக இருக்கமுடியும்? நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணியாராகவோ அல்லது அவரது மகனும், மன்னருமான சார்லசாகத்தான் இருக்க முடியும் இல்லையா?
ஆனால், உண்மையில் ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்புடையவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
Image credit: Getty Images
பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அதிக சொத்து மதிப்புடையவர் குட்டி இளவரசி சார்லட்தானாம்!
ஆம், இளவரசி சார்லட்டுக்கு 7 வயதுதான் ஆகிறது, அவரால் சொத்துக்கள் வாங்க முடியாது, ஏன் வாக்களிக்கும் வயது கூட இன்னும் வரவில்லை.
ஆனாலும், சார்லட்டின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்களாம். பிரித்தானிய மகாராணியாரின் சொத்து மதிப்பே தோராயமாக 520 மில்லியன் டொலர்கள்தான்.
Image credit: Getty Image
அது எப்படி இவ்வளவு சிறிய வயதில் சார்லட்டின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்களானது?
உண்மை என்னவென்றால், சார்லட் முதலான குட்டி இளவரசர் இளவரசிகளின் சொத்து மதிப்பு, அவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அமைவதில்லை. மாறாக, அவர்கள் பிரித்தானிய பொருளாதாரத்தின் மீதும், உலக மக்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையிலானது.
அதாவது, உலகம் முழுவதும் உள்ள மக்கள், குட்டி இளவரசி சார்லட்டுடன் தங்கள் பிள்ளைகளை ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு ஸ்டைல் ஐக்கான் எனலாம்.
உதாரணமாக, பிரித்தானிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட ஒரு மஞ்சள் நிற ஸ்வெட்டரை சார்லட் அணிந்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே மாதிரியான ஸ்வெட்டர்கள் 24 மணி நேரத்துக்குள் விற்றுத்தீர்ந்துவிடுகிறதாம்.
ஆக, இப்படி பிரித்தானிய பொருளாதாரத்துக்கு சார்லட் செய்யும் பங்களிப்பின் அடிப்படையில்தான் அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறதாம்.
இன்னொரு விடயம், சார்லட்டை விட அவரது அண்ணனான குட்டி இளவரசர் ஜார்ஜின் சொத்து மதிப்பு குறைவு. அவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image credit: Getty Images